Sunday, May 21, 2006

நான் கண்ட நாய்கள்




நான் கண்ட நாய்கள் பலவிதம்.
நேற்றுப் பிறந்த
குறிதெரியாத "இள"ம்நாய்களிலிருந்து..
விரைவீங்கித் தொங்கும்
வாலிப வயோதிக நாய்கள் வரை..
நான் கண்ட நாய்கள் பலவிதம்.

சில நாய்கள்
கொள்கைக்காகக் கத்துவதாய்
சொல்லிக் கொள்கின்றன.
கொள்கை குறித்தி விசாரிக்கப் போனால்
கத்துவதை விடுத்து கடியையே பதிலாக தருகின்றன...

அந்நாய்களின் கொள்கைகளைக்
அவைகளே தீர்மானிப்பதில்லை என்பதைக்கூட
அறியாமலேயே வாழும் நாய்ப்பாடு பெரும்பாடு...

தனக்குக் கொள்கையில்லை
என்ற பிரகடனத்துடன்
தன் உள்மன அழுக்குகளையெல்லாம்
கொள்கையாக்கிக்
கத்துகிற நாய்கள் சில இங்குண்டு.

இன்னும் சில நாய்கள்
பொறாமையில் கத்தும்..

சில நாய்கள்
அரசியல் சார்பில்
அடியாட்களாய்க் கத்தும்...

ஜாதிகள் இல்லையென்று கொக்கரிக்கும்
சில நாய்கள் பின்னொருநாள்
ஜாதிக்கட்சிகளை நக்கி மகிழும்.
அந் நக்கலை நியாயப்படுத்த
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.
என்றாலும்
பெண் துவாரம் தேடும்போது
ஜாதியை மறந்துவிடுகிற இவை
தன் ஜோடியை தேடும்போது மட்டும்
ஜாதியை மறக்காத சுபாவத்தை
இயற்கையிலேயே கொண்டிருப்பவை..

இலக்கியச் சேவையென்று
கத்துகிற நாய்கள் சில உண்டு..
எதிரே இல்லாத
பிடிக்காத எழுத்தாளனை
பாய்ந்து பிடுங்குவதாய்
வேஷம் கட்டும் அவற்றை
அவற்றின் கோஷத்தை வைத்தே
எளிதில் அடையாளம் காணலாம்...

பதவிக்காகக்
கத்துகிற நாய்களும் சில இங்குண்டு.
இந்நாய்களின் குரலில்
எஜமானன் மீதான நன்றியுணர்ச்சி வழியும்.
பதவி கொடுத்தமைக்கு
நன்றி தெரிவிக்கும் முகமாய்
பரம்பரை பழக்கத்தில்
இவை கத்திக் கொண்டிருக்கின்றன.
இவை
சில நேரங்களில்
எஜமானனுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு
எஜமானன் சொல்லாமலே கத்தி
உபத்திரவங்கள் கொண்டு வருவதுமுண்டு.

இனச்சேவை, மொழிச்சேவை என்ற பெயரில்
இருப்பை காட்ட கத்தும் சில நாய்கள்.

சினிமா சான்ஸு என்ற பெயரில்
சில்லரைக்காக கத்தும் சில நாய்கள்.

தன் குரல் தானே கேட்கிற மகிழ்ச்சியில்
குயிலென்று நினைத்துக் கொண்டு
தொடர்ந்து கத்துகின்ற நாய்களும் உண்டு.

பெரிய நாய்களோடு சேர்ந்து கத்தினால்
கவனிக்கப்படுவோமென்று
கத்துகிற குட்டிநாய்களும் உண்டு.

தனியாகப் பார்க்கும்போது
வாலைக் குழைத்து நெளிந்து வளைந்து
பின் -
கூட்டத்தில் தைரியமாகக்
கத்துகிற நாய்களும் உண்டு.

தன் குரலின் அருமை அறியாமல்
அடிக்கடிக் கத்திக்
கல்லடி வாங்குகிற நாய்களும் உண்டு.

கத்துவதற்கு நேரமில்லை
பின்னர் வருகிறேன் என்று
சொல்லிப்போகிற நாய்களும் உண்டு.

நாய்ப்பெருமை பேசித் திரியும்
இந்நாய்களை
யாரும் நாயென்று விளித்துவிட்டால்
இவற்றுக்குப் பிடிக்காது.
"யார் நாயென்று" தன்னினம் தாழ்த்தித்
தானே கத்துகிற சிந்தனைத்திறம் பெற்றவை இவை.

இருட்டில் வாழ்கிற இந்நாய்கள்
வெளிச்சத்துக்கு ஏங்குபவை.
ஆனால்
வெளிச்சத்தைக் கண்டால் அஞ்சுபவை.
அதனால் -
திருடர்களின் துணைகொண்டு
வெளிச்சக் கம்பங்கள்மீது
சிறுநீர் கழித்துச் சிரிக்கின்றன.
பின்னெழுகிற கோபத்தில்
சிலநேரங்களில்
தங்கள் கண்களுக்குள் தங்கள்
சிறுநீரைப் பீச்சிக் கொண்டு
வெளிச்சத்தைத் துரத்திவிட்டதாய்
ஆனந்தப்படுவதுமுண்டு.

தான் தின்றதைத்
தான் கக்கிப் பின்
தானே நக்கித்தின்னும் நாய்கள் அல்ல இவை.
எஜமானர்களின் ஏவலுக்கேற்ப
அவர்கள் சொல்லும் கக்கலை
அதிசுவாரஸ்யமாய் நக்கித் தின்பவை.

இவ்வாறு
இந்நாய்கள்
இருப்பை நியாயப்படுத்த
தொடர்ந்து கத்துகின்றன.
என்றாலும் -
தன்வீட்டைத் தாண்டிவந்து
பொதுமைதானத்தில்
பூனையுடன்
சண்டைபோடுகிற தைரியத்தைக்கூட
தம் விரைகள்
தமக்கு வழங்காத வருத்தம்
இந்நாய்களுக்கு உண்டு.
தன் குறியைத் தான் விறைத்து
தனக்குமுன்னே ஆட்டிக்காட்டி
அவ்வருத்தம் போக்கிக் கொள்ளும்
இந்நாய்கள்.

குரலையும் இரவல் வாங்கிக்
கத்துகிற இந்நாய்கள்
சுயமாய்க் கத்துகிற வக்கில்லாதவை.
கத்தலையே குரைத்தல் என்று
கற்பனையில் திளைப்பவை
என்றாலும் -
தங்களை
நாய்களென்று உணராதிருப்பதாலும்
பெரும்பாலான நேரங்களில்
தம்பெட்டையைத் திருப்திபடுத்த மட்டுமே
பிறர்மீது பாய்ந்துபிடுங்குவதாலும்
இந்நாய்களை நேசிக்கலாம் நாம்...


இது ஒரு இன்ஸ்பிரேஷன் கவிதை(?!)... நான் கண்ட நாய்கள் மூலத்திற்கு நன்றி... என்னது! மூலத்துக்கு சிட்டுக்குருவி லேகியம் நல்லதா? அடடடடடா... இந்த லேகியம் விக்கிறவனுங்க தொல்ல தாங்க முடியலடா சாமி...


47 comments:

  1. எனது இதற்கு முந்தைய நாய்க்கவிதைகள் (அ) நாய் சம்பந்தப்பட்ட உடைக்கப்பட்ட உரைநடை

    1. நாய் அழகுதான் - கடிக்கும் வரை

    2. நாய் க் காதல்

    ReplyDelete
  2. ரொம்பக் காட்டமான கவிதை!
    அப்படி என்ன ஆயிற்று!?

    மேலும் 'நாய்' கவிதைகளைப் படிக்க http://aaththigam.blogspot.com வரவும்!

    ReplyDelete
  3. என்ன இங்கே 'வாள்வாள்'னு சத்தம்? :-)

    ReplyDelete
  4. ஸாரி! நான் கொஞ்சம் லேட்!
    :))

    ReplyDelete
  5. என்ன திடீரென 'இரண்டுகால் நாய்கள்'
    மீது இவ்வளவு கோபம் முகமூடி???.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  6. நன்றி எஸ்.கே. // நான் கொஞ்சம் லேட் // எதற்கு? :))

    *

    வாங்க பூனை பிரியை துளசி.. நீங்க பாட்டுக்கு அப்பிராணியா (இதுக்கு என்ன அர்த்தம்?) எதாவது கேட்டு வச்சிடறீங்க. உடனே "இங்க மட்டும் கேட்கறீங்க, அங்க கேட்க கூடாதா"ன்னு ஒரு அழுவாச்சியா அழுவறாங்க...

    *

    அய்யோ கோபமெல்லாம் ஒன்னுமில்ல துபாய் ராஜா..

    நான் சிரிச்சிகிட்டே
    (டைப்) அடிச்சேன்னு
    நினைச்சிகிட்டே
    திருப்பியும்
    படிச்சி பாருங்க,
    அது புரியும்

    ReplyDelete
  7. ஒத்த நாய் கடிச்சாலே தொப்புள்ளைச் சுத்தி பதினாறு ஊசி குத்தணும்பாயங்க... நீங்க கலாயச்ச நாய்களோட மொத்தக் கணக்கைத் தோராயமா கணக்குப் பார்த்தாக் கூட .... ம்ஹூம் உம்ம தொப்புள் பொழைக்கிறது ரொம்பக் கஸ்ட்டம்...:))))

    ReplyDelete
  8. ஐயா,

    அங்கிருந்து "நான் கண்ட பேய்கள்" என பதில் வரும்.

    இதை சொல்வதால் சில பேருக்கு புல்லரித்து எரியவும் செய்யும்

    (நிஜ) பிராணிகளின் நண்பன்

    கால்கரி சிவா

    ReplyDelete
  9. //ஜாதிகள் இல்லையென்று கொக்கரிக்கும்
    சில நாய்கள் பின்னொருநாள்
    ஜாதிக்கட்சிகளை நக்கி மகிழும்.
    அந் நக்கலை நியாயப்படுத்த
    ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.
    என்றாலும்
    பெண் துவாரம் தேடும்போது
    ஜாதியை மறந்துவிடுகிற இவை
    தன் ஜோடியை தேடும்போது மட்டும்
    ஜாதியை மறக்காத சுபாவத்தை
    இயற்கையிலேயே கொண்டிருப்பவை..
    //
    Great. Nalla seruppadi.

    Mugamoodi sir. Yaarukku puriyudho illayao, yaara ellam solli irukkingalo adhugalukku kandippa puriyum.

    ReplyDelete
  10. பெண் துவாரம் என்பதற்குப்பதில்
    பின்நவீனத்துவமாக யோனி என்று எழுதி, தலைப்பாக "யோனியைத் தேடும்போது..." என்று வைத்தால் இன்னும் நன்றாக போணி ஆகும்.

    ReplyDelete
  11. Ó¸ãÊ

    ±ÉìÌ þó¾ Á¡¾¢Ã¢ ⼸Á¡ ±Ø¾ÈÐ즸øÄ¡õ ¦¾Ã¢Â¡Ð. ¦ÅÈ¢¿¡¨Â¨Â «Êì¸¢È Á¡¾¢Ã¢ ¿¡ÂÊ §¿ÃÊ¡ «Êò¾¡ý ±ÉìÌ ÅÆì¸õ. þó¾ Á¡¾¢Ã¢ ¸Å¢¨¾í¸ ±øÄ¡õ ¿¡ö¸ÙìÌ ÀÊì¸×õ ÒâóÐ ¦¸¡ûÄ×õ ¦¾Ã¢Â¡Ð, «Ð¸ÙìÌ ¦¾Ã¢ó¾ ¦Á¡Æ¢Â¢ø¾¡ý ¿¡õ À¾¢ø ¦º¡øÄ §ÅñÎõ. «Îò¾ Ó¨È ¦ÅÈ¢ ¿¡¨Â¨Â ±ôÀÊ «ÊôÀ¡÷¸§Ç¡ «ôÀʧ þó¾ ¦º¡È¢¿¡ö¸¨ÇÔõ «ÊÔí¸û.

    ãìÌ Å¢¼îº ¿¡ö¸û, ¦ÀÂ÷ «Ä¢ ¿¡ö¸û, Åí¸¢ (¦º¡È¢) À¢Êò¾ ¿¡ö¸û ±ýÚ þíÌ ¿¡ö¸û ÀÄÅ¢¾ò¾¢ø ¾¢Ã¢¸¢ýÈÉ ±ó¾ ¿¡öìÌõ ¸Õ¨½ ¸¡ð¼¡Áø «ÊÔí¸û. À¢Êô §À¡¼ ¸¡÷ôÀ§Ã„ý ÅñÊ ¸¡ò¾¢Õ츢ÈÐ.

    «ýÒ¼ý
    ÅÆ¢ô§À¡ì¸ý

    ReplyDelete
  12. எஸ்.வி.சேகர் (கவனிக்க :: அம்மா கட்சி ஆள்) நாடகத்தில் வரும் வசனம் :: சின்ன கவுண்டர் பாத்துபுட்டு, இவன் குட்டித்தாயி தொப்புளை சுத்தி பம்பரம் விட்டு பம்பரம் விட்டு டாக்டர் ஊசி போடணும்னு தேடும்போது எது தொப்புள்னே தெரியாம போச்சைய்யா...

    நம் லட்சணமும் அதுதான்.. ஏற்கனவே நாய்க்கடி வாங்கிய அனுபவம் ஜாஸ்தி என்பதால் இப்போது ட்ரீட்மெண்டுக்கு எல்லாம் அவசியமில்லை :))

    *

    கால்கரி சிவா, நீங்க பெயில். தலைப்ப மாத்திட்டாங்க.. ஆனா மொத தடவயா சொந்தமா எளுதியிருக்காங்கலாம் :)

    *

    வருகைக்கு நன்றி வாக்கிங் ஸ்டிக் (இதுக்கு தமிழ்ல என்ன?)

    *

    // ஏன்? //

    கவிஞனாகும் முயற்சி என்று(ம்) கொள்ளலாம்

    *

    நன்றி அனானி.. கருத்துக்கு நன்றி.. ஏதோ உரைநடையை உடைத்து உடைத்து ஒப்பேற்றுகிறேன்.. பின்நவீனத்துவம் எழுதும் உத்தேசம் எல்லாம் ஒன்றும் இல்லை... (கவிதையில் உபயோகப்படுத்தப்பட்ட முன் நவீனத்துவ வார்த்தைக்கு நன்றி :: தமிழின கவிஞர் சுரா)

    ReplyDelete
  13. //உடனே "இங்க மட்டும் கேட்கறீங்க, அங்க கேட்க கூடாதா"ன்னு ஒரு அழுவாச்சியா அழுவறாங்க... //

    இதுக்கு என்ன அர்த்தம்னு புரியாம இருந்துச்சு. அப்புறம்தான் தெரியவந்துச்சு.

    ஆனா ஒண்ணு, இங்கேயோ, அங்கேயோ நடக்குற எதுவும் ஏன்? எதுக்கு? ன்னு இன்னமும் எனக்கு விளங்கலை.
    ஆனா இதெல்லாம் மனசுக்குப் பிடிக்கலை. ரெண்டும்தான்.
    மனசு வருத்தமாக்கூட இருக்கு.

    எல்லாரும் கொஞ்சம் யோசிங்க, இதெல்லாம் தேவையான்னு.

    ReplyDelete
  14. எதோ தனிமனித தாக்குதலை (புதுசாக ஹி ஹி ) சந்தித்துவிட்டது போல் தெரிகிறது...:) ஸ்மைலியாக்கும்..

    ReplyDelete
  15. நாயின் கால் நாய்க்கு தானே தெரியும்?

    ReplyDelete
  16. அப்படியா லக்கிலுக். உமக்கு கால் தெரிஞ்சிருக்கு. சொல்றீரு.

    ReplyDelete
  17. அரசியல்கள் apart (அப்படி ஒன்று இருக்கிறதா ;-) ஆக்கம் பிடித்திருக்கிறது.

    அரசியலை கணக்கெடுத்து கொண்டால் நீங்கள் (நானும்) எந்த வகை நாய் என்று முனைவர் பட்டம் வாங்க குதித்துவிடப் போகிறார்கள் :P

    [இப்போதெல்லாம் கவிதைகளைப் பாடி ஒலிக்கோப்பாக ஆக்குவதுதான் in-thing. உங்க குரலைக் கேட்க ஓடோடி வருவோம் :-)]

    ReplyDelete
  18. ////அப்படியா லக்கிலுக். உமக்கு கால் தெரிஞ்சிருக்கு. சொல்றீரு.////

    அதைக்கூட அனானியா வந்து சொல்லுற அளவுக்குத்தான் உங்களுக்கு பரம்பரை வீரமோ? :-)

    ReplyDelete
  19. குசும்பனாருக்கு கூறிய அதே கருத்து தான் இங்கேயும் முகமூடியாரே!

    மற்றவர்களுக்காக தங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  20. முகமூடி,

    கவிதை பற்றி நோ-கமெண்ட்ஸ். ஆனால், சில அவதானிப்புகள்.

    1. பச்சொந்தி மக்கள் கட்சி என்று வலைப்பதிவில் தொடங்கினீர்கள். அதைப் பின்பற்றி முன்னணி, பின்னணி என்று வலைப்பதிவில் குரல்கள் கேட்கின்றன.

    2. நாய்க்கவிதையை வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தீர்கள். அதைப் பின்பற்றி, வலைப்பதிவு முழுவதும் நாய்ப் பதிவுகள்/கவிதைகள் எழுத வைத்துவிட்டீர்கள்.

    ட்ரெண்ட் செட்டாராயிட்டீங்களே ராசா :-)

    பொன்மொழி: உங்களை மறக்க முடியாதவர்களே, உங்கள் ஆளுமையால் பாதிக்கப்பட்டவர்களே உங்களைக் காப்பியடிக்கிறார்கள், வைகிறார்கள். ஏசுகிறார்கள்.

    பி.கு.: சு.ரா மூன்று நாய்க் கவிதைகள் எழுதியிருக்கிறார். நீங்களும் மூன்று நாய்க் கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். சு.ரா. எழுதிய இன்னும் இரண்டு பூனைக் கவிதை, ஒரு ஆந்தைக் கவிதை பாக்கியிருக்கிறதே. எப்போது எழுதப் போகிறீர்கள். வலைப்பதிவில் ஆந்தை, பூனை பற்றிய பதிவுகளை வரச்செய்வதில் உங்களுக்கு விருப்பமில்லையா? :-)

    - பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  21. ஏப்பா, இந்தப் பதிவை யாரும் தமிழ்மணத்திலேருந்து தூக்கலேயா?

    ReplyDelete
  22. "சில நாய்கள்
    இருந்த இருப்பில்
    கத்தத் தொடங்கி
    நிறுத்தத் தெரியாமல்
    அக் கத்தலில் மாட்டிக் கொண்டு சுழலும்."-பசுவய்யா.

    இக்கவிதைதாம் ஞாபகத்துக்கு வருகிறது,முகமூடி!

    ReplyDelete
  23. //அதைக்கூட அனானியா வந்து சொல்லுற அளவுக்குத்தான் உங்களுக்கு பரம்பரை வீரமோ? :-)//

    ஆஹா, லக்கிலுக் என்பது உங்களுடைய ஒரிஜினல் பெயரா? லக்கிலுக் என்பதே ஒரு அநாமதேயம் தான்.

    ReplyDelete
  24. பதிவின் தரம் இறங்குவதை குறித்து இப்பதிவில்(லும்) வருத்தப்பட்ட நண்பர்களுக்கு :: இது போன்ற வருத்தம் எனக்கும் பல பதிவுகளை காண்கையில் வருவதுண்டு... ஆனால் என்ன செய்வது.. நம்மால் வருந்தத்தான் முடிகிறது. அவர்களே தம்மை பரிசோதனைக்குட்படுத்தினால்தான் உண்டு.

    வெகு சிலர் இப்பதிவும் யாருக்கோ பதில் சொல்வதற்காக தரம் குறைந்து எழுதப்பட்டதோ என்று தொனிக்கும் அர்த்ததில் எழுதியிருக்கிறீர்கள்... ஒரு வட்டத்துக்குள் கற்பனையாக கட்டம் கட்டப்படும் அபாயத்திலும் உரிமையோடு உங்கள் கருத்தை எடுத்துச்சொல்ல விழைந்த உங்கள் அன்புக்கு நன்றி.

    இந்த சந்தர்ப்பத்திலே இக்கவிதை வெளிவந்திருப்பதால் இதை ஒரே ஒரு பதிவருக்கு பதில் சொல்வதற்காக எழுதிய கவிதை என்று நினைக்க வேண்டாம் என்று மட்டும் உங்களை கேட்டுக்கொள்கிறேன். நடுநிலை போர்வையில் கேள்வி கேட்டு, கேட்டவர் மீது நான் கொண்ட மதிப்பின் காரணமாக நேரம் செலவழித்து பதிலெழுதி, பின் அந்த நடுநிலை பல்லிளித்ததை பார்த்த காலம் ஒன்று உண்டு. தாக்கிக்கூட தனிப்பட ஒரு பதிவு எல்லாம் எழுதும் அளவுக்கு கூட அக புற கண்மூடி சொல்லப்படும் கற்பனைகளின் தராதரம் உயர்வாக இருப்பதாக நான் கருதுவதில்லை என்பதால் இப்பொழுதெல்லாம் பதில் சொல்வதில் நேரம் செலவழிப்பதில்லை நான்...

    இப்பதிவிலே சர்ச்சைக்கு சம்பந்தமாக இருக்கும் அந்த கடைசி "தலையணை சண்டை" படத்தை தவிர்த்து பார்த்தால் இப்பதிவு பொதுவாக கவிதை என்ற வகைப்பாடலில் வரும் என்றே எனக்கு தோன்றுகிறது. எனவே இதை பதில் கவிதை என்றெல்லாம் எண்ணாமல், கவிதையை பற்றிய உங்களின் விமர்சனங்களை வைப்பீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சர்ச்சைக்கு அப்பாற்பட்ட பார்வையிலும் இது தரம் குறைந்த கவிதையாக உங்களுக்கு தோன்றின், அப்படி நினைக்கவும் அதை வெளிப்படுத்தவும் உங்களுக்கு சகல உரிமையும் உண்டு... இக்கவிதையில் வரும் சில வார்த்தைகள் அப்பட்டமாயும் அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருப்பின், அது மூலத்தின் காரணமாயும் இக்கவிதைக்கு பொருந்தி வருவதாலுமே இருப்பதாய் நினைக்கிறேன். எதிர்காலத்தில் வேறு நளினமான வார்த்தைகள் கிடைத்து அது பொருத்தமாகவும் இருப்பின் அவற்றை பிரயோகப்படுத்துவதில் ஆட்சேபம் இல்லை

    ReplyDelete
  25. Babble, துளசி, நாகை சிவா முந்தைய பின்னூட்டத்தில் ஓரளவு என் நிலைப்பாட்டை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

    *

    செந்தழல் ரவி, லக்கி லுக் தங்கள் கருத்துக்கு நன்றி

    *

    பாபா // அரசியல்கள் apart // நீங்கள் ஒருவராவது இந்த கோணத்தில் பார்த்தமைக்கு நன்றி. ஒலிக்கோப்பு சிறந்த யோசனை. ஆனால் எதிர்த்து வரும் ஒலிக்கோப்பை ஒலிபரப்பினால் Board of A. Control லிருந்து ஆட்கள் வரும் அபாயம் உண்டு என்பதால் ஒரு தயக்கம் :))

    *

    பி.கே.எஸ், ஏற்கனவே தீய்ந்த வாசனை போய் தீய்ந்தும் போய் (கண்ணிய) பாத்திரம் எல்லாம் உருகி ஓடிக்கொண்டிருக்கிறது.. சு.ராவுடன் எல்லாம் என்னை ஒப்பிட்டு எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றாதீர்கள்..

    பூனை பற்றி ஞானம் இல்லை.. ஆந்தைகள் குறித்து சிறிது உண்டு... ஆந்தைகள் விழிக்கும் நேரம் தெரியாதததல் காத்திருக்கிறேன்.

    *

    பசுவய்யாவின் வரிகளுக்கு நன்றியும் அன்பும் ஸ்ரீரங்கன்

    ReplyDelete
  26. தமிழ் வலையுலகில் வெறி நாய்களின் அட்டகாசம் குறித்து ஒரு அலசல்:
    ----------------------------------------

    தமிழ் வலைப்பதிவுலகில் இந்த வெறி நாய்த் தொல்லை ஆரம்பம் முதலே ஜாஸ்தியாகத்தான் உள்ளது, தங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து எழுதுபவர்களை மிரட்டவும், அரட்டவும், அடி பணிய வைக்கவும் ஒரு சதிகாரக் கும்பல் இயங்கி வருகிறது. இந்தச் சதிகாரக் கும்பல் இந்திய விரோத , இந்து விரோத, பிராமண விரோத, தேச விரோதக் கும்பல், இந்தக் கும்பல் அடிப்பதற்கென்றே , பயமுறுத்துவதற்கென்றே ஏவி விட பல வெறி நாய்களை எப்பொழுதும் பழக்கப் படுத்தி வைத்துள்ளார்கள். முகமூடிப் பதிவிலும், பி கே எஸ் பதிவிலும், குசும்பன் பதிவிலும், மாயவரத்தான் பதிவிலும், இன்னும் எத்தனையோ இந்திய தேசியம் பேசும் பதிவர்களின் பதிவில் இந்த வெறிநாய்கள் பாய்ந்து, பாய்ந்து குரைத்தும், கடித்தும் வருவது தொடர்கிறது. அதைப் பற்றி வழக்கம் போல இந்த வழிப்போக்கனின் ஒரு தொகுப்பு:




    "நாய்க்குக் கோமணம் கட்டி நந்த வனத்தில் விட்டாற் போல" இந்தத் தமிழ் கோமணத்தில் பல சொறி நாய்களும், வெறி நாய்களும் திரிகின்றன. அதில் ஒரு ஏவல் நாய் தன் பதிவில் எழுதுவதெல்லாம் வசவுகள் மட்டுமே, அதைக் கேட்டால் "புழுத்த நாய் கூட குறுக்க போகாது" ஆனால் "வைத்தியன் வீட்டு நாய் நோய் அறியாது என்பது போல" இந்த நாய்களுக்கு வெறி பிடித்தது கூடத் தெரியாமல் எஜமான் பேச்சைக் கேட்டுக் கொண்டு "உதை பட்ட நாய் ஊரெல்லாம் சுற்றினாற் போல" பாய்ந்து குதறுகின்றன. ஆனால் இந்த ஏவல் நாய்களுக்கு மரியாதை என்ன என்பதும் சபை நாகரீகமும் தெரிவதில்லை, "முதலியார் வீட்டு நாய்க்கு முத்து மாலையின் பெருமைதான் தெரியுமா என்ன?" இது போன்ற அடியாள் வேலை பார்க்கும் நாய்களுக்கு தமிழ் மணத்தில் இதற்காகவே பதவிகள் கொடுக்கப் படுகின்றன "வெக்கங்கெட்ட நாய்க்கு வெண் பொங்கலாம் என்பது போல்". இதில் ஒரு நாய் குரைத்தால் ஒன்பது நாய் பின்னூட்டப் பெட்டியில் வந்து குரைக்கின்றன, "முதல் தெரு நாய் குலைத்தால் மூணாந்தெரு நாயும் குரைக்கும் என்பது போல".


    ஆனால் "இந்த வெறிநாய் கடி பட்டவனுக்கு நாட்டில் ஒரு மூலிகை கிட்டாமல் போகாது என்பது போல" குசும்பனும், முகமூடியும் பதிலடி கொடுத்தனர். இந்த வெறிநாய்கள் எல்லாம் அடங்காது "பட்டி நாய் தொட்டி சேராது என்பது போல". ஆனால் ஒரு முறை ஏவப் பட்டு செமத்தியாக பதில் அடி வாங்கிய நாய்கள் மீண்டும் உடனே வந்து குரைப்பதில்லை என்பது முந்தைய பதிவுகளைப் படித்தவர்களுக்குப் புர்நிதிருக்கும் 'சூடு கண்ட நாய் சாம்பல் குளிக்காது என்பது போல". "கொட்டவால் நாய்க்கு நெஞ்சில் அறிவு" என்பார்கள் அதுவும் சரிதான் என்பது போலத்தான் இருக்கிறது இவர்களது நடவடிக்கைகள். "வண்ணான் வீட்டு நாய் வீட்டுக்கும் உதவாது துறைக்கும் உதவாது" என்பது போல இந்த அடியாள் நாய்களின் பதிவுகளால் யாருக்கும் பயன் கிடையாது என்பது தான் உண்மை. இந்த ஏவல் நாய்களுக்கு முகமூடி, குசும்பன் போன்றோரின் அங்கதமும் தெரிவதில்லை அவர்கள் அருமையும் தெரிவதில்லை, ஏவி விட்டால் வந்து பாய்ந்து கடிக்கத்தான் தெரியும், "செட்டி வீட்டு நாய் கணக்குப் பார்த்தா கடிக்கும்?" "வக்கீலும் வைத்தியனும் வாசலில் நாயைக் கட்டியிருந்தால் உருப்படுமா?" அது போல தமிழ் மண நிர்வாகியாக இது போன்ற ஏவல் நாய்களைக் கட்டி வைத்தால் தமிழ் மணம் உருப்படுமா? ஆனால் "நாய் நக்கிக் குளம் வற்றப் போவதில்லை" என்பது போல இந்த நாய்களின் நக்கல்களுக்கு முகமூடி, குசும்பன் போன்றவர்கள் பயந்து வற்றி வாடிவிடுவதில்லை என்பது ஒரு ஆறுதல்தான். இப்ப செம அடி வாங்கிய பின் "குட்டி போட்ட நாய் கூனி உட்கார்ந்தது போல", " மழையில் நனைத்த நாய் முடங்கிப் படுத்தது போல" கொஞ்சம் ஒதுங்கி இருக்குதுங்க ஆன மீண்டும் மீண்டும் வரும். "சத்திரத்தையும் கட்டி நாயையும் வைத்தது போல" தமிழ் மணத்தையும் கட்டி இள வஞ்சி போன்ற ஆட்களை நிர்வாகியாகவும் வைத்துள்ளார்கள்


    "நாய் நக்க நக்க கல்லும் தேயும் என்பது போல" மீண்டும் மீண்டும் ஏவி விடுகிறார்கள் எஜமானிகளும், எஜமானர்களும் அமெரிக்காவிலும், அலாஸ்காவிலும், கனடாவிலும் உட்கார்ந்து கொண்டு. அவர்கள் ஏவி விட விட, "திருடன் துணைக்கு திருட்டு நாய்" என்பது போல இந்த அடியாள் நாய்கள் "கழுநீர் தொட்டி நாய் போல" வந்து விழுகின்றன. "நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்' என்பது போல இந்த நாய்களை அடிக்கப் போய் குசும்பனோட கவுரவத்துக்குத்தான் குறைவாகி விட்டது. "காலடி பட்ட நாயும் காலறுந்த செருப்பும் கவைக்கு உதவா" என்பது போல இந்த அடியாள் நாய்களை இனி யாரும் மதிக்கவும் மாட்டார்கள். ஆனால் முகமூடியும், குசும்பனும், பாஸ்டன் பாலாஜியும் "நாய்க்கும் நாகத்துக்கும் தலையில்தான் உயிர் நாடி" என்பதறிந்த நச்சென்று நாலு சாத்து சாத்தினார்கள்.



    ஆனால் இந்த வெறிநாய்களின் கொட்டம் அடங்காது. "மசநாய் சாவதெப்போது ஊர் சுத்தம் ஆவதெப்போது ?" "வேட்டை கண்ட நாயும் சாட்டை கண்ட மாடும் சும்மா இருக்குமா என்ன?" ஆக கொஞ்சம் நாள் கடந்து மீண்டும் வந்து குலைக்கவும் கடிக்கவும் செய்யும். என்னதான் அடி வாங்கினாலும் "நக்க விட்ட நாயும், கொத்த விட்ட கோழியும்" நிற்கவா போகின்றன? "பச்ச புள்ள பீயை நக்க வர்ற நாய் மாதிரி" மீண்டும் மீண்டும் வரத்தான் போகின்றன.


    ஆகவே குசும்பரும், முகமூடியும் பி கெ எஸ்ஸ¤ம், இன்னும் இந்திய தேசியத்தின் மீதும், தர்ம நியாயங்கள் மீதும், மனிதர்களை மனிதர்களாக நடத்தும் குணம் உள்ளவர்கள் மீதும் வெறி நாய்கள் மீண்டும் மீண்டும் , எஜமானர்களாலும், எஜமானிகளாலும் ஏவி விடப் பட்டு கடித்துக் குதறத்தான் போகின்றன. இப்பொழுதுதான் ஒரு நாய் அடி வாங்கி ஒதுங்கி ஓரமாய் உட்கார்ந்து தன் புண்களை நக்கிக் கொண்டிருக்கிறது, மீண்டும் அடுத்த ஏவல் நாயை இவர்கள் தயார் படுத்தும் வரைக்கும் நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம், ஆனால், எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக கம்பை மட்டும் கீழே வைத்து விட்டு ஓய்வெடுத்து விடாதீர்கள். இந்த நாய்களுக்கு வெறி பிடித்திருக்கின்றன என்பதை எப்பொழுதுமே நினைவில் வைத்துச் செயல் படுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    மீண்டும் இந்த வழியே வரும் பொழுது சந்திப்பேன், அது வரை நாய்க்கடி படாமால் ஜாக்கிரதையாக இருக்கவும்

    அன்புடன்
    வழிப்போக்கன்

    பி.கு: இன்னும் நாய் பழமொழி வேணும்னா சொல்லி விடவும், ஒரு லாரி லோடு பழமொழி அனுப்பி வைக்கிறேன், உங்க அடுத்த பதிவுகளுக்கு ஒத்தாசையா இருக்கும்.

    ReplyDelete
  27. "நாய் படும் பாடு"

    ReplyDelete
  28. மேலே PKS!
    கீழே வழிப்போக்கன்!!

    உங்க டபுள் ஆக்டிங் சூப்பர்! அன்னியன் படமெடுக்கும்போது ஏங்கே இருந்தீர்கள்! :)

    ReplyDelete
  29. முகமூடி அவர்களே,
    பிறந்த நாள் கொண்டாட்டமெல்லம் முடிஞ்சு இன்னிக்குத் தான் உங்க நாய்ப் பதிவைப் பார்த்தேன். அதுக்கு முன்னாலே துபாய்வாசி போட்ட பதிவைப் பார்த்துட்டேனா? ஒண்ணுமே புரியலே. அப்புறம் இங்கே வந்து பார்த்தால் தலையைச் சுத்துது போங்க.

    ReplyDelete
  30. //இந்த சந்தர்ப்பத்திலே இக்கவிதை வெளிவந்திருப்பதால்//

    மூலவரின் கவிதையில் மேற்கோளிட்டுக் காட்டப்படாத சொல்லும் / சொல்லின் பகுதியும் தனியாக எடுத்துக் காட்டப்பட்ட போதும்

    அதற்குத் தானோ என்று பொருள் கொண்டு பதில் சொன்னவர்களுக்குத் தக்க பதில்கள் சொல்லிய பின்னும் (நீங்க பெயில். தலைப்ப மாத்திட்டாங்க.. ஆனா மொத தடவயா சொந்தமா எளுதியிருக்காங்கலாம் :))

    // இதை ஒரே ஒரு பதிவருக்கு பதில் சொல்வதற்காக எழுதிய கவிதை என்று நினைக்க வேண்டாம் என்று மட்டும் உங்களை கேட்டுக்கொள்கிறேன். //

    -- புரிஞ்சிகிட்டோங்க!!

    ReplyDelete
  31. நீங்கள் எழுதும் நாய்கவிதைகள் நாய்களுக்கு அல்ல சக பதிவாளர்களுக்கு உங்களை பற்றி நானும் ஒரு கவிதை போட உத்தேசம். காரணம் ஜாதியை குறித்து உங்களின் பார்வை மேலும் இதுபோல் நீங்கள் எழுதக்கூடாது என்பதாலும்
    visit here:
    http://kilumathur.blogspot.com

    ReplyDelete
  32. நன்றி கார்த்திக்வேலு

    *

    "நாய் படும் பாடு"

    பேராசிரியர் நன்னன் சொல்கிறார் :: தவறு.. எங்க உஷாஜி திருப்பி சொல்லுங்க... "நாய்கள் படும் பாடு"

    *

    கீதா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு இவ்ளோ நாளா. நீங்க என்ன வட்ட செயலாளரா இருக்கீங்களா?

    *

    பொன்ஸ், தழுவல் என்றால் இன்ஸ்பிரேஷன் மட்டும் எடுத்துக்கொண்டு அதே மாதிரி எழுதுவது என்று நினைத்திருந்தேன்.. நீங்கள் "மேற்கோளிட்டுக் காட்டப்படாத" என்று சொல்வது புரியவில்லை.

    ஒரே ஒரு பதிவருக்கு பதில் சொல்வதற்காக எழுதியது அல்ல... இதில் இன்னமும் மாற்றமில்லை... தலைப்ப மாத்திட்டாங்க என்று எழுதியது இந்த பதிவுக்கு பதிலாக எழுதப்பட்ட பதிவை குறித்த கருத்து... இந்த பதிவு ஒருவருக்கு மட்டும் எழுதிய பதில் அல்ல...

    அப்புறம் பொன்ஸ்... புரிஞ்சிடுச்சின்னு எழுதியிருக்கீங்க.. உங்களுக்கு தெரியாததில்ல.. மீண்டும் சொல்றேன். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், பதிவில் படிப்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.

    *

    வாங்க அமீரகத்தை சேர்ந்த மகேந்திரன். P.

    // உங்களை பற்றி நானும் ஒரு கவிதை போட உத்தேசம் // தாராளமாக எழுதலாம்... அதில் தப்பே இல்லை...

    // காரணம் // என்னங்க நீங்க பச்ச புள்ளயா இருக்கீங்க... கவிதை எழுத காரணம் எல்லாம் வேணும்னு சொன்னா சபையில சீசன்டு கவிஞர்கள் இருக்காங்க, அவங்க சிரிப்பாங்க..

    // ஜாதியை குறித்து உங்களின் பார்வை // ஆரம்பமே கோணலா இருக்கேப்பா... ஜாதியை குறித்த என் பார்வை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இப்படியெல்லாம் ஞானக்கண்ணுல தெரியாதத பற்றி நினைச்சு இளங்கவிஞர் ஸ்டேஜ்ல கற்பனைய சிதற விடக்கூடாது. அதெல்லாம் அனுபவக்கவிஞர் ஆனப்புறம் பாத்துக்கலாம்.. இப்போதைக்கு ஒருமுகப்படுத்தி எழுதுங்க..

    // மேலும் இதுபோல் நீங்கள் எழுதக்கூடாது என்பதாலும் // அதுக்கு கஷ்டப்பட்டு கவிதை எல்லாம் எழுதுவாங்களா என்ன? நாலு திருக்குறள அனுப்பி வைக்கலாமே...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. எந்த உலகத்திலே இருக்கீங்க நீங்க? வவாசங்கத்தின் நிரந்தரத் தலைவலியான எனக்குப் பிறந்த நாள் சங்கத் தலைவர் கைப்புள்ளயால் கொண்டாடப்பட்டு, உபதலைவர் தேவால் வழிமொழியப்பட்டு. கொ.ப.செ.ஆற்றலரசி பொன்ஸால் வழிநடத்தப்பட்டதே. எத்தனை குழந்தைகளுக்குப் பேர் வைத்தேன் கீதாலக்ஷ்மி, கீதாப்ரியா, கீதாஞ்சலி என்று. உங்க பமக போல எங்கள் கட்சி சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் என்று நினைத்து விட்டீர்களே.அப்பாடி, இந்தச் சாக்கில் ஒரு சுய விளம்பரம் செய்தாகி விட்டது. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  34. இந்தப் பதிவு விரும்பத்தக்கதாக இல்லை. எழுதுவதும் எழுதாமலிருப்பதும் உங்கள் உரிமை. தவிர்த்திருக்கலாம் என்றெல்லாம் சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் படித்து விட்டு, 'இதைப் படிக்காமல் தவிர்த்திருக்கலாம்' என்று எனக்குத் தோன்றியது.

    ReplyDelete
  35. நான் வர்லப்பா வெளயாட்டுக்கு ஏதோ சொல்ல தோனுச்சு. நீங்க அத போஸ்டுமார்டமில்ல பன்னுறீங்க

    ReplyDelete
  36. நான் வர்லப்பா வெளயாட்டுக்கு ஏதோ சொல்ல தோனுச்சு. நீங்க அத போஸ்டுமார்டமில்ல பன்னுறீங்க

    ReplyDelete
  37. கீதா, பமக சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பது போல் வெளிப்பார்வைக்கு தோன்றினாலும் சமூக நீதியை நிலைநாட்ட அமைதியான வழியில் போராடிக்கொண்டே இருக்கிறது என்பதை மட்டும் இந்நேரத்திலே...

    *

    மீனாக்ஸ், உங்கள் வெளிப்படையான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  38. கடவுள் வாழ்த்து
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
    1

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.
    2

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.
    3

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.
    4

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
    5

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
    6

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.
    7

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.
    8

    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.
    9

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
    10

    ReplyDelete
  39. அதுதானே, ஒரு நாயா ரெண்டு நாயா? நா சத்தியமா நாயை, மன்னிக்க நாய்களைத்தான் சொல்கிறேன்

    ReplyDelete
  40. வாய்யா வா..
    இதற்கு தூ என்று உமிழ்வதை பின்னூட்டமாக இடலாமென்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு கூட அருகதையில்லையென போய்விட்டேன்.
    ஆனால் உங்கள் விளக்கத்தை பார்த்ததும் சொல்லிவிட்டே போய்விடலாமென்று வந்தேன். நீங்கள் ஊரையெல்லாம் கிண்டலடிப்பீங்க. பதிலுக்கு ஒருத்தர் உங்களை பத்தி அதே விதத்தில் சொன்னா எல்லாரையும் நாய்ன்னும் திட்டுவீங்க. அது எப்பிடிங்க நீங்க வலைப்பதிவில் எழுதுரவங்களையெல்லாம் நாய்ன்னு திட்டுவீங்க. ஆனால் அதையெல்லாம் பார்க்காமல் அல்லது தற்செயல் நிகழ்வு என்று ஒதுக்கிவிட்டு நாங்க கவிதையின் கட்டமைவை பத்தி விமர்சிக்க வேண்டுமோ.. நயவஞ்சக, அயோக்கிய புத்தி உள்ளவங்க நிறைய இருக்காங்க. ஆனால் அதுவே ஆளாய் இருப்பதை இங்குதான் பார்க்கிறேன். முன்பெல்லாம் சில பதிவர்கள் சோத்தனமென்று சொல்வார்கள் அதற்கு மேலே ஏதாவது சொல்லவேண்டுமென்றால் முகமூடித்தனம் என்று சொல்லலாம். அந்த அளவில் இருக்கிறது உங்கள் இந்த விளக்கம்.

    ReplyDelete
  41. மகேந்திரன்... ஏதோ எல்லாரையும் போல எனக்கு அறிவுரை சொல்றாப்புல உங்க பாணியில நாலு குறள் சொல்வீங்கன்னு பாத்தா நீங்க பாட்டுக்கு 1330 சொல்ற ஐடியால இருக்கீங்க போலருக்கு... வேணாம்யா.. நீங்க சொல்றத நல்லா புரிஞ்சிகினேம்பா.. வுட்ருங்கோ..

    *

    உஷா.. அய்யய்யோ.. இப்பதிவில் நாய்கள் என்பது குறியீடாக இருக்கிறதாம்.. உங்களுக்காவது புரிகிறதா? அப்படியே நான் கோபப்பட்டு தாக்க வேண்டுமானால் ஏன் ஒரே ஒரு நாய் என்று குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக நாய்கள் என்று எழுதியிருக்கிறேன்.. இதுக்காவது உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்கள்... வர வர தழுவல் கவிதை கூட தடை செய்துவிடுவார்கள் போல. (நம்மள ஆள விடுங்கப்பாங்கறீங்களா..)

    ReplyDelete
  42. வாங்க வாங்க சோழநாடன்... அக்கம்பக்கம் அல்லாரும் சவுக்கியமா? அது எப்படிங்க "கிண்டலுக்கு பதில் கிண்டல் செய்ததால் கோபப்பட்டு எல்லாரையும் திட்டுகிறேன்"னு என் பக்கத்துலயே உக்காந்து என் உணர்ச்சிய குறிப்பெடுத்து எழுதிய மாதிரி அவ்ளோ ஆத்தண்டிக்கா சொல்றீங்க... சரி இப்ப உங்க கருத்துக்கு ஒரு பதில் சொல்றேன்னு வச்சிக்கிங்க.. எந்த மனநிலைல பதில் சொல்றேன்னு மாயக்கண்ணாடில பாப்பீங்களா... சரி விடுங்க..

    "தூ" என்பது கவிதையின் தரத்துக்கா இல்லை எழுதியவர் முகமூடி என்பதாலா... இந்த கவிதையை வேறு யார் (யார் யாருன்னு உங்களுக்கு தெரியாததா) எழுதியிருந்தாலும் - இதே போன்றதொரு சூழ்நிலை என்றே கொள்வோம் - உங்கள் கருத்து "தூ"வாகத்தான் இருந்திருக்குமா இல்லை கவிதையை சிலாகித்திருப்பீர்களா? கவிதையில் வரும் நாய்களின் போலித்தன குணாதிசயங்களை நீங்கள் இதற்கு முன் கண்டதேயில்லையா? இல்லை அதையெல்லாம் சொல்ல எனக்கு அருகதை இல்லையா? இக்கவிதையை திறனாய்வு செய்தால் பல விஷ(ய)ங்கள் குறித்து பேச வேண்டி வரும்.. பேச (குறைந்த பட்சம் தற்போதைக்காவது) விருப்பமில்லை...

    மேன்மைதகு சோழநாடன் கண்டுபிடித்த முகமூடித்தனம் பட்டம் - தன்யனானேன் (முதன் முதலில் இந்த பட்டத்தை நி* உபயோகப்படுத்துவார்னு ஒரு பெட் கட்டிக்கலாமா?)

    :))))) {நல்லா உரைக்கிற மாதிரி கேட்டீர்கள் சோழநாடன்... உங்கள் பின்னூட்டத்தை படித்தவுடன் மட்டும் இப்படி முகம் சிவக்க கோவம் வருகிறதே... அப்படித்தானே அடுத்தவர்களுக்கும் இருக்கும்... உங்களுக்கு பதில் சொல்லும்போது விஜயகாந்த் - வேண்டாம் அவர் எதிர்க்கட்சி - சிவாஜி போல கண்கள் சிவந்து கன்னம் துடிப்பதை ஊனக்கண்ணால் பார்த்தேன்... இப்போதாவது இதற்கு உரைக்கட்டும், இதை படித்தாவது இனி இது போன்ற கவிஜைகள் எழுதாமல் திருந்தட்டும் என்றெல்லாம் சூப்பர் நடுநிலைவாதிகள் எதிர்காலத்தில் எங்காவது அடிக்கப்போகும் ஜல்லியை நினைத்து இப்போதே போட்ட ஸ்மைலி)

    ReplyDelete
  43. நம்ம புது வலைல தினம் பத்து குறள் போடறன் வந்து பாருங்க உறை எழுதுங்க
    நன்றி.
    http://inthavaaram.blogspot.com

    ReplyDelete
  44. முகமூடி,
    உமிழ்ந்தது முகமூடிக்காகவோ இலக்கணப் பிழை கண்டுபிடித்தோ இல்லை.

    வேறு இடமென்று இளவஞ்சியின் பதில் கவிதையை கேட்டீர்களானால், அதை உங்கள் கவிதைக்கான காரமான பதிலாக மட்டும் பார்த்ததால் நான் சொல்ல ஏதுமில்லை. கண்டிப்பாக எனக்கும் இதுபோல கவிதைகள் எழுதத்தெரிந்து உங்கள் கவிதைக்கு பதிலாக எழுதியிருந்தால் அதுபோலத்தான் இருக்கும் என்று உணர்ந்ததாலும் அந்த இடத்தில் எதும் சொல்ல தோன்றவில்லை.

    நீங்க கோபத்தோட படிச்சீங்களோ இல்லையோ நான் கோபத்தோடுதான் போட்டேன். இதில் மறைக்க எனக்கு ஒன்றுமில்லை. இத்தனைக்கும் அது நேற்று எழுதியது. இன்று திரும்பவும் படித்து பார்த்து போடலாம் என்று மீண்டும் தோன்றியதாலேயே போட்டேன்.

    உங்கள் பதிலில் ஏகப்பட்ட உள்குத்து இருக்கோ. வரிகளுக்கிடையே படிக்கவெல்லாம் இப்போ முடியாது. எதுவேணா இருந்துட்டு போகட்டும். நான் சொல்ல வந்ததை வெளிப்படையாக சொன்னேன். அவ்வளவுதான்.

    ReplyDelete
  45. சோழநாடனுக்கோர் முன்குறிப்பு :: இதை படிக்கும் போது வேகமாக படித்தால் நான் கோபமாக எழுதினதாக தோன்றும் என்பதால் மா.நன்னன் தமிழ் மாதிரி நிறுத்தி நிதானமாக படிக்க கேட்டுக்கொள்கிறேன்.. அங்கங்கே சில ஸ்மைலிக்களை தூவிக்கொள்ளவும்

    // வேறு இடமென்று இளவஞ்சியின் பதில் கவிதையை // இளவஞ்சி கவிதை எழுதியிருக்கிறாரா? எனக்கு தெரியாது. இப்பதிவு எழுதப்பட்டதற்கு பிறகு வந்த இளவஞ்சியின் பதிவில் இருப்பதை கவிதை என்று குறிப்பிடுகிறீர்கள் என்றால் தகவலுக்கு நன்றி...

    நான் கேட்டது அரசியலில் உங்களுக்கு ஒத்த கருத்துடையவர்கள் யாரும் இக்கவிதையை எழுதியிருப்பார்களேயானால் அப்போதும் "தூ" என்பதுதான் உங்கள் விமர்சனமாக இருந்திருக்குமா என்பதையே... அரசியலுக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை என்று நீங்கள் கூறுவீர்களேயானால் "இப்பதிவு ஒருவருக்கு மட்டும் பதிலாக நான் சொன்னதல்ல" என்ற என் கூற்றை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன் இதை வெறும் கவிதையாக மட்டும் உங்களால் பார்க்கமுடியவில்லை.. இதை தற்செயல் நிகழ்வென்று பார்க்க இயலாதா? சு.ராவின் நான் கண்ட நாய்கள் கவிதையை பாஸ்டன் பாலாஜியின் பதிவில் பார்த்தவுடன் எழுந்த எண்ணத்தை, சூழ்நிலை சரியில்லை என்றும் சில பேர் தவறாக நினைத்துக்கொள்வார்கள் என்றும் வெளியிடாமல் இருக்க வேண்டுமா? இதை "நான்" எப்போது எழுதினால் சூழ்நிலை சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்...

    அரசியலுக்கு அப்பாற்பட்டு இக்கவிதையின் மீதான் உங்கள் பார்வை "தூ" என்பதாகத்தான் இருக்கிறதென்றால் நான் அதை உங்களது விமர்சனமாக மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன். அதை விடுத்து என் பக்க கருத்தாக நான் எதுவும் சொல்லாத நிலையில் - என் பக்கமும் ஒரு கருத்து இருக்கும் என்ற அளவிலாவது சிந்திப்பீர்கள் என்று நினைக்கிறேன் - எதிர்கருத்து சொல்பவர்களின் கருத்தே இறுதியானது, அதில் எல்லா நியாயமும் அடங்கியுள்ளது என்ற ரீதியில் பேசாதீர்கள்.

    எல்லாவற்றிற்கும் மேலாக இளவஞ்சியின் மீதான எனது கோபம் இக்கவிதை என்று எழுதி என்னையும் இப்பதிவையும் கேவலப்படுத்தாதீர்கள்.

    ReplyDelete
  46. முகமூடி

    அருமையான அங்கத உணர்வுடனும், சமயோதிடமுள்ள நகைச்சுவையுணர்வும் உங்கள் எழுத்தில் மிளிர்திறது. உங்களது நீரிய எழுத்துப் பணி தொடர என் அன்பான வாழ்த்துக்கள். எனது ஆதரவும் பாராட்டுக்களும் என்றும் உங்களுக்கு உண்டு.

    உங்கள் எழுத்துப் பணியைத் தொடர்ந்து ஆதரித்து வரும் அன்பு நண்பன்
    ச.திருமலைராஜன்


    பி.கு இப்ப என்ன திடீரென்று ஆதரவு தருகிறேன் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இப்ப இணையத்தில் யாராவது யாருக்காவது ஆதரவு தருவதுதான் ·பாஷனாமே, நான் எனக்குப் பிடித்த பதிவரான முகமூடிக்கு எனது ஆதரவினை அளிக்கிறேன். அவ்வளவுதான்.

    ReplyDelete